ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம்.
தமிழகத்தில் பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் கோடை காலம் தொடங்கும். இம்முறை பிப்ரவரியிலிருந்தே கடுமையான வெப்பம் காணப்படுகிறது. கடந்த 124 ஆண்டுகளில் மிக அதிக வெப்பநிலை நிலவிய பிப்ரவரி இது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெப்பநிலை படிப்படியாக அதிகரித்தும் வருகிறது. சில பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்தாலும் தமிழகத்தில் இப்போதே பல நகரங்களில் வெப்பம் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டிவிட்டது.
கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்
குட்மார்னிங் தாத்தா.. Any Breaking News? பேப்பர்ல ஏதாவது முக்கிய செய்தியா? உன் அறை கதவைத் திறந்தவுடனே வாசனை மூக்கைத் துளைக்கிறதே.. என்ன..? வேறொன்னும் இல்ல தாத்தா, அம்மா ஸ்பிரே அடிச்சா கரப்பான்பூச்சிக்கு அடிப்பாங்க நான்தான் வீட்டுக்குள்ள பயன்படுத்துற ரூம் ஸ்பிரே அடிச்சேன். வீட்டிற்குள் பயன்படுத்துற, ரூம் ஸ்பிரே போன்ற வாசனை திரவியங்களில், மாசுகள் இருக்கின்றன என்கிறது ஓர் ஆய்வு. எந்த அளவுக்குத் தெரியுமா? சாலைகளில் வாகனங்கள் வெளியேற்றும் புகையில் இருப்பதற்கு இணையான மாசுகளாம். அதனால், இந்த ஸ்பிரே வேண்டாம்.. என்ன நான் சொல்றது கேட்குதா.. கேட்காமல் போயிட்டு இருக்க..